Categories
லைப் ஸ்டைல்

காலையில் வேகமா எழுந்திருக்கணுமா….” அது நம்ம கையில தான் இருக்கு”… அதுக்கு சில எளிய டிப்ஸ்..!!

காலை வேளையில் நல்ல தூக்கம் வரும் பொழுது எழுந்து கொள்வது என்பது பலருக்கும் மிகவும் கடினமான விஷயம். ஆனால் அதிகாலையில் எழுவது மிகவும் நல்லது.

வெயில் காலம் ஆனாலும், குளிர் காலம் ஆனாலும் காலையில் சோர்வடையாமல் எழுந்திருக்க உங்களுக்கான டிப்ஸ்

1.அலாரம் வைத்து எழுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் உடலை ஒரு அலாரமாக மாற்ற வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எந்திரிக்க வேண்டும்.

2.இரவில் லேசான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் உடல் லேசாக இருக்கும். காலையில் எழுந்திருக்கும் பொழுது சோம்பேறித்தனம் இருக்காது.

3.படுக்கையிலிருந்து எழுந்தவுடன் சிறிது நேரத்திற்கெல்லாம் குளிக்கவும். ஏனென்றால் நீர் உடலின் வெப்ப நிலையை மாற்றி சுறுசுறுப்பாக உணரவைக்கும்.

4.உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்யுங்கள். இது நாள் முழுவதும் புத்துணர்ச்சியை அளிக்கும்.

5.இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பும், காலையில் எழுந்தவுடனும் தண்ணீர் குடிப்பது நல்லது. இதனால் உடலில் சோர்வு இல்லாமல் துடிப்பாக வைத்திருக்கும்.

Categories

Tech |