Categories
லைப் ஸ்டைல்

காலைல வெறும் வயிற்றில் சாப்பிட்டு வாங்க…. அப்புறம் தெரியும்…. இதோட அருமை…!!

வெந்தயத்தை சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.

நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் பொருளில் வெந்தயமும் ஒன்று ஆகும். இதில் விட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, விட்டமின் பி, சி, மெக்னீசியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் பொட்டாசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. வெந்தயத்தில் உள்ள வைட்டமின் சி சத்து சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

1.வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உடல் சூட்டினால் ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் விரைவில்  குணமாகும்.

2.இதை ஊற வைத்து அரைத்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பொலிவுடன் காணப்படும்.

3.தேவையற்ற கெட்ட கொழுப்பினை குறைக்கும் சக்தி வெந்தயத்திற்கு அதிகம் இருக்கிறது. உடலில் சூடு பிரச்சினை அதிகம் உடையவர்கள் சிறிது வெந்தயத்தை தினமும் இரவில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

4.வெந்தயத்தில் அதிகளவு இரும்புச்சத்து இருப்பதால் ரத்தசோகை நோயை கட்டுப்படுத்துகிறது. வெந்தயம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கலாம்.

5.இதில் அதிக அளவு நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே தினமும் இதை எடுத்துக் கொள்ளும் போது ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் இதனால் முடி உதிர்வது தடுக்கப்படும். அதைத் தவிர வெந்தயத்தை அரைத்து தலைக்கு தடவி 30 நிமிடம் கழித்து தேய்த்து குளித்து வந்தால் முடி ஆரோக்கியமாக இருக்கும்.

Categories

Tech |