Categories
மாநில செய்திகள்

‘காலை உணவு திட்டம்’…… செப்.,16 முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும்….. அதிரடி உத்தரவு….!!!!

அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன்படி தமிழக அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதில் முதற்கட்டமாக மாநகராட்சி நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த 1,545 பள்ளிகளில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இதற்காக 33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்ட உள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கும் உணவை சாப்பிட்டு பார்த்து தரம் பார்த்து அறிய வேண்டும் எனவும், தரமான முறையில் சிற்றுண்டி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்த பிறகு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும். அவர் தொடங்கி வைத்த மறுநாள் பிற மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |