டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து தன்னுடைய டிக் டாக் மூலமாகவும், தன்னுடைய வெகுளிதனமான பேச்சின் மூலமாகவும் மக்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த நாள் முதலே காமெடியாக இருந்ததால் இவருக்காக ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தனர். ஆனால் இவர் தன்னுடைய குடும்பத்தின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனையடுத்து முத்து தன்னுடைய பழைய பாணியை கையில் எடுத்து மீண்டும் youtube இல் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய நண்பரின் விலை உயர்ந்த காரில் அமர்ந்த ஜிபி முத்துவை நண்பர்கள் சேர்ந்து கதற வைத்துள்ளனர். இந்த காட்சியினை யூட்யூபில் பதிவிட்டுள்ளார். அதாவது ஜிபி முத்து வை கார் கிளட்ச்சில் கால் வைக்க சொல்லிவிட்டு பின்பு அதிலிருந்து கால் எடுத்தால் அவ்வளவுதான் வண்டி ஓட ஆரம்பித்து விடும் என்று கூறியதால் அதற்கு ஜிபி முத்து தன்னுடைய வழக்கமான வெகுளித்தனத்தை காட்டும் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.