அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2011 முதல் 2021 காலகட்டத்தில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி வீரமணி. இவர் மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறையில் அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
2011 முதல் 2021 வரை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் 76.65 கோடி ரூபாய் சொத்துக்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் தொடர்பாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டார்கள். அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தற்போது சொந்தமான கே.சி வீரமணிக்கு சொந்தமான சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் ஒரு டிஎஸ்பி தலைமையிலான போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.