சி.வி சண்முகத்திற்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, நீங்கள் வகிக்கிற பதவி மரியாதை கூறியது,, மாண்பு குரியது. அந்த மரியாதையை காப்பாத்துற வகையில நடந்திருக்குங்க, பேசுங்க அது தான் என்னுடைய வேண்டுகோள். என்ன ஒருமையில சி.வி. சண்முகம் பேசுறாரு. அதனால என்னுடைய தகுதி குறைய போறது இல்ல.சிவி.சண்முகம் அவர்களே…! உங்களை நோக்கி மைக் நீட்டுவது பேசுவதற்கு தானே தவிர, வாந்தி எடுப்பதற்கு இல்லை.
திமுகவுக்கு மானம் இல்லையா ? அப்படி என்று கேட்கிறார் சண்முகம். நான் கேக்குறேன் உங்கள கொலை செய்ய ஆளு அனுப்பினாரா ? அவருடைய வீட்டுல போய் தலை வாழை இலை போட்டு சாப்பிட்டீங்களா ? உனக்கு மானம் இல்லையா ? நான் கேக்குறேன். காலையில சின்னம்மா…. மாலையில் அம்மா…. மறுநாள் காலையில அம்மம்மா…. அடுத்த நாள் எந்த அம்மா ? அப்படின்னு நித்தமும் மாறி திரியும் போது வெட்கம் இருந்துச்சா உங்களுக்கு ? அம்மா, அம்மா என்று சொன்ன சண்முகத்தை பார்த்து கேட்கிறேன்….
அந்த அம்மாவோட மரணத்தில் இருக்கக்கூடிய மர்மத்தையும் விளக்க கண்டுபிடிக்கக்கூடிய முயற்சியில் நீங்கள் ஈடுபட்டீங்களா ? சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டி பேட்டி கொடுத்தாரே… துணை முதல் அமைச்சராக இப்போ இருக்குற இருக்குற பன்னீர்செல்வத்தை கருங்காளி, துரோகின்னு சொன்னதும் சிவி. சண்முகம் தானே. இன்றைக்கு இரண்டு பேரும் ஒரே அமைச்சரவையில் எப்படி இருக்கீங்க ? 2012ஆண்டு சண்முகத்தின் கிட்ட இருந்த அமைச்சர் பதவியையும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியையும் ஜெயலலிதா பறிச்சாங்க.
எதுக்காக பறிச்சாறு சொல்லுவாரா சண்முகம் ? பத்திரபதிவு துறையிலே அவர் புகுந்து விளையாடத் தொடங்கினது மட்டுமல்ல… அதிகாரிகளை கண்டவாறே திட்டினார். வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுனாரு. நேத்து கூட வாட்ஸ்அப்ல ஒன்னு ஓடிட்டு இருக்கு. அது மாதிரி திட்டுனாரு. அதனால அவருடைய பதவியை பறிச்சு மூளையில உட்கார வச்சாரு அம்மையார் ஜெயலலிதா அவர்கள். முந்தைய ஆட்சிகாலத்தில் அவரால் அமைச்சராக முடியவில்லை.
இந்த முறை கூட கருணை அடிப்படையில் தான் மாவட்ட கோட்டாவில் அமைச்சரானவர் தான் சி.வி. சண்முகம் . இந்த வரலாறுகள் எல்லாம் இந்த மாவட்டத்தில் மக்களுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். தன்னுடைய பதவியை பயன்படுத்தி, இந்த மாவட்டத்தில் மக்களுக்கு இவர் செஞ்சது என்னென்ன ? என்று நான் கேட்ட கேள்விக்கு இது வரை சண்முகத்தால் பதில் சொல்ல முடிஞ்சதா ? ஊருக்கு சவால் விடுறது இருக்கட்டும், சொந்த ஊருக்கு என்ன செஞ்சீங்க ? அத முதல்ல சொல்லுங்க.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வந்தப்போ தெருத்தெருவாக போய் நந்தர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம்னு பழனிச்சாமி சொன்னாரே. துருமையாவது நகர்த்தினீங்களா ? எம்.ஜி.ஆர் . நூற்றாண்டு விழா நடந்துச்சே… அப்போது பேசுனீங்களே… விழுப்புர நகரத்திற்கு விரிவாக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவோம் என்று டெண்டர் விட்டு ஒன்றரை வருஷம் ஆச்சு. ஏன் இதுவரை பணிகள் தொடங்கல ? விழுப்புரம் நகராட்சியாவது சிறப்பு நகராட்சி ஆக்கினீங்களா ? அதுவும் இல்ல.
பத்து ஆண்டுகள் ஆகியும் விழுப்புரத்திற்கு சுற்றுவட்ட சாலை வந்துச்சா ? இல்ல. முதலமைச்சர் ஒரு உதவாக்கறை. மந்திரிகள் உளறு வாயர்கள். இப்படி பட்ட ஆளு கிட்ட மாட்டிக்கிட்டு இந்த ஆட்சி சிக்கி தவித்துக்கொண்டு இருக்கு. இவங்க கிட்ட இருந்து இந்த கோட்டையை மீட்பதற்கான தேர்தல் தான் இந்த தேர்தல். இவங்க பொதுமக்கள் குறைகளை கேட்கவே மாட்டாங்க, பொது மக்களுடைய குறைகளை தீர்க்கவும் மாட்டாங்க. இவங்க மக்களைப் பற்றி நினைக்க மாட்டார்கள்.
மக்களோட இருக்கவே மாட்டாங்க. இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வச்சு, மக்களாட்சிக்கு தொடக்கப்பள்ளி வைக்கணும்ன்னு உங்களையெல்லாம் நான் கேட்க விரும்புகிறேன். கழக ஆட்சி மலரும், உங்கள் கவலைகள் யாவும் தீரும் என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.