தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் இத்திட்டத்தில், உணவு தயார் செய்யும் பொறுப்பை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. இதற்கு சத்துணவு ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், பிள்ளைகளுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால், அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.