தமிழகத்தில் நீதி கட்சி ஆட்சியில் இருந்து 1920 ஆம் வருடம் மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் பின் காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர் மதிய உணவு திட்டம் படிப்படியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு காலை சிற்றுண்டி திட்டம் என்ற மகத்தான திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் தனியார் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த மாவட்டங்களில் தனித்தனியே தனியா நிர்வாகத்தினர் இதனை செயல்படுத்தி வருகின்றார்கள்.
இந்த நிலையில் இந்த விஷயத்திற்கு அங்கன்வாடி மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்து சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதாவது காலங்காலமாக பள்ளி குழந்தைகளுக்கு முறையாக சமைத்து உணவு அளித்து வரக்கூடிய எங்களுக்கு வழங்க ஏன் அரசு முன்வரவில்லை என கேள்வி எழுப்புகின்றனர். மேலும் இது தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அங்கன்வாடி ஊழியர்கள் சத்துணவு அமைப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றார்கள். காலை சிற்றுண்டி திட்டம் தொடர்பாக சத்துணவு அமைப்பாளர்கள் பேசும்போது நாங்கள் ஏற்கனவே பள்ளி குழந்தைகளுக்காக மதிய உணவை சமைத்து அளித்து கொண்டிருக்கிறோம். 1982 ஆம் வருடம் முதல் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றோம் 40 வருடங்களாக சிறப்பான முறையில் செயல்படுத்தி வரும் எங்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை கொடுத்திருக்கலாம்.
ஆனால் இதனை தனியாரிடம் ஒப்படைத்திருப்பதால் அவர்கள் வேறு ஒரு இடத்தில் சமைத்து வாகனங்கள் மூலமாக பள்ளிக்கு கொண்டு வரவேண்டும் இதனால் செலவுகள் தான் அதிகம் ஏற்படும். மேலும் எங்களிடம் சமையலாளர்கள், உதவியாளர்கள், சமையல் பாத்திரங்கள், மின்சார வசதி, கேஸ் சிலிண்டர்கள் போன்றவை இருக்கிறது. அதனால் சிறப்பாக சமைத்து தர முடியும் ஏற்கனவே ஒரு குழந்தைக்கு இரண்டே கால் ரூபாயில் சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறோம். அதுவே காலை சிற்றுண்டி திட்டத்திற்கு எட்டே கால் ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது.அந்த தொகையை எங்களிடமே கொடுத்தால் வருமானமும் கிடைக்கும் ஏற்கனவே இருக்கும் அனுபவத்தின் மூலமாக பள்ளி குழந்தைகளுக்கு சிறப்பான முறையில் சமைத்து தர முடியும். மேலும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதில் எங்களுக்கு வருத்தம் தான் லாப நோக்கத்தோடு செயல்படும் தனியாரை விட எங்களால் நன்றாக செயல்பட முடியும் எனக் கூறியுள்ளனர். மேலும் சிலர் தனியாரிடம் ஒப்படைத்தால்தான் கமிஷன் பார்க்க முடியும் என்ற காரணம் கூட பின்னால் இருக்கலாம் அரசு நன்றாக ஆலோசித்து சத்துணவு அமைப்பாளர்கள் கைகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர். இதன் மூலமாக முதல்வர் ஸ்டாலினுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.