இணையதளத்தில் சமீப காலமாகவே பல்வேறு விதமான வித்தியாசமான மற்றும் ஆச்சரியப்படக்கூடிய வீடியோக்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஒரு பாம்புடன் நட்பாக பழகும் பெண்ணின் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. பொதுவாக பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால் அந்த வீடியோவை பார்த்தால் அந்த பயமே போய்விடும் போல் இருக்கிறது.
https://www.instagram.com/reel/Chp-mClFJiC/?utm_source=ig_embed&utm_campaign=loading
அதாவது ஒரு அழகான பெண்மணியின் காலை மிகப்பெரிய பாம்பு ஒன்று சுற்றுகிறது. அந்தப் பாம்பை கண்டு பயப்படாமல் அந்த பெண் அதை கையில் எடுத்து விளையாடுகிறார். அந்தப் பாம்பை பார்த்து அந்த பெண்ணின் முகத்தில் துளி கூட பயமில்லை. அதோடு பாம்பு பெண்மணியின் காலை நீண்ட நேரம் சுற்றியும் அவரை கடிக்கவே இல்லை. இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.