Categories
மாநில செய்திகள்

காலை முதல்…. சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை…. சிக்கிய லட்சக்கணக்கான பணம்…!!

சோதனைசாவட்டியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் பரிம்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கட்டுக்கட்டாக பணம் மட்டுமல்லாமல் காய்கறிகள் உட்பட லஞ்சமாக பெறப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் அமைந்துள்ள எல்லையோர சோதனை சாவடிகளில் அதிகாலை 4 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் கணக்கில் வராமல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒருபுறம் பணம் பறிமுதல் செய்யப்பட்டாலும் மறுபுறம் சற்று வித்தியாசமாக லஞ்சமாக பெறப்பட்ட காய்கறிகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால் வாகனங்களில் நுங்கு காய்கறிகள் போன்றவற்றை கொண்டு செல்லும் வாகன ஓட்டுநர்களிடம் இருந்து பணத்தை லஞ்சமாக வாங்கும் அதிகாரிகள் காய்கறிகளையும் வாங்குவது தெரியவந்துள்ளது.

Categories

Tech |