இடைவிடாது மழை பெய்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மதியம் 1 மணி அளவில் கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனைய்டுத்து நொய்யல் மற்றும் வேலாயுதம்பாளையம் பகுதிகளில் காலையிலிருந்து மாலை வரை இடைவிடாமல் மலை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.