பஞ்சாப் மாநிலத்தில் இன்று 117 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் 1304 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். அம்மாநிலத்தில் மொத்தம் 2.14 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 24 ஆயிரத்து 689 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு தபால் ஓட்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது காலை 8 மணி முதல் பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் வாக்குபதிவு தொடக்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை இந்த தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.