பொங்கலையொட்டி கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கும் பொங்கல் பரிசுடன் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு 2500 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு அறிவித்துள்ளது.
மேலும் உணவு மற்றும் தானிய அங்காடி மாலை 5 மணி முதல் 8 மணி வரை செயல்படும் என்றும் மாதத்தில் 2 மற்றும் 4 ஆம் ஞாயிறு விடுமுறை எனவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவலுக்கு மத்தியில் மக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் பொருட்களை வாங்கிச் செல்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.