ராஜஸ்தானில் நடைபெற உள்ள தேர்வை முன்னிட்டு இன்றும் நாளையும் இன்டர்நெட் சேவைக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் தேர்வு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்றும் நாளையும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இன்டர்நெட் சேவை தடை விதிக்கப்பட உள்ளதாக மண்டல ஆணையாளர் பி.எல். மெஹ்ரா தெரிவித்துள்ளார். தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Categories