Categories
மாநில செய்திகள்

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இதற்கு அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதில் பேருந்துகள் இயங்கும் அனைத்து வகையான கடைகள் செயல்படும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில், ஹார்ட்வேர், புத்தக கடைகள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து பாத்திரக் கடைகள், பேன்ஸி அழகுசாதன பொருட்கள், போட்டோ, வீடியோ, சலவை, தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |