தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதில் ஒருசில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அலுவலங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.