மே 2ஆம் தேதி 8:30 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டனர். தேர்தலின் முடிவுகள் மே இரண்டாம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் அதிகாரி ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மே 2ம் தேதி காலை 8.30 மணிக்கு தபால் வாக்குகள் முதலில் என்ன படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறிய தொகுதிகளில் 14 மேஜைகள், பெரிய தொகுதிகளில் 30 மேஜைகளை வரை கொண்டு வாக்குகள் எண்ணப்படும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று மாலை தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.