தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை கற்று வருகிறார்கள். சிலர் வீட்டில் இருந்தவாரே அலுவலக வேலைகளை செய்து வருகின்றனர். அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மின் தடை செய்யப்படாமல் இருந்தது.
ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக மின்வாரிய பராமரிப்புக்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி பட்டாபிராம் பகுதி, புழல் பகுதி, சோத்துப்பெரும்பெடு பகுதி, ஆவடி பகுதி, மாதவரம் பகுதி, அண்ணாசாலை பகுதி, மயிலாப்பூர் பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.