Categories
தேசிய செய்திகள்

கால்களில் கொப்பளங்கள் வந்தாலும் சரி!… நாங்கள் நிறுத்தப்போவதில்லை!… ராகுல்காந்தி சபதம்….!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை “பாரத் ஜோதா யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை சென்ற 7ஆம் தேதி துவங்கினார். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பாத யாத்திரையாக போகும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெற இருக்கிறது.

கன்னியாகுமரியில் துவங்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணம் இப்போது 6-வது நாளாக கேரளாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கால்களில் கொப்பளங்கள் வந்தாலும் சரி, நாட்டை ஒருங்கிணைக்க நாங்கள் புறப்பட்டுள்ளோம். நாங்கள் நிறுத்தப் போவதில்லை” என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |