Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கால்களை இழந்த இளைஞன்…. 5,00,000 நிதி திரட்டிய எம்பி….. குவியும் பாராட்டுக்கள்…!!

விபத்தில் கால்களை இழந்த இளைஞனுக்காக ட்விட்டர் மூலம் 5 லட்சம் நிதி திரட்டிய எம்பிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 5ஆம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் சாயல்குடியை சேர்ந்த இளைஞர் முத்தமிழ்செல்வன் என்பவர் ரயில் விபத்து ஒன்றில் தனது இரண்டு கால்களை இழந்து விட்டதாகவும், அவரது தந்தையும் சமீபத்தில் இறந்து விட்டதால் தமிழ்ச்செல்வனுக்கு 5 லட்சம் மதிப்பிலான 2 புரோஸ்தெடிக் செயற்கை கால்கள் பொருத்துவதற்கு உதவ வேண்டுமென கேட்டிருந்தார்.

அதனடிப்படையில் #prosthesishelp ஹாஸ்டக்  அனுப்புபவர்களுக்கு முத்தமிழ் செல்வனின் வங்கி விவரங்களை செந்தில்குமார் கொடுத்திருந்தார். எம்பியின் வேண்டுகோளுக்கிணங்க பலரும் நிதி உதவியை கொடுத்து வந்தனர் .  இந்நிலையில் செயற்கை கால்கள் பொருத்துவதற்கு தேவையான 5 லட்சம் என்ற இலக்கு இரண்டு நாட்களுக்குள் எட்டிவிட்டது. உங்கள் ஆதரவு இல்லாமல் சாத்தியமில்லை. ட்விட்டர் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி என எம் பி செந்தில்குமார் பதிவிட்டுள்ளார். எம்பியின் இத்தகைய செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |