காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிவபுரம் கிராமத்தில் கூலி தொழிலாளியான வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பத்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வசந்தாவுக்கு சொந்தமான ஆடு 2 குட்டிகளை ஈன்றது. அதில் நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் தமிழக கால்நடை துறை அதிகாரிகள் ஆட்டுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வசந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
Categories