திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் காமராஜர் அணை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக சிறுத்தை ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் நடமாடுகிறது. கடந்த 24-ஆம் தேதி சிறுத்தை சடையாண்டி கோவில் அருகே மானை அடித்து கொன்று இழுத்து சென்றதை சில விவசாயிகள் பார்த்துள்ளனர்.
இதேபோல் ஆடு, நாய்களையும் சிறுத்தை அடித்து கொன்றதால் விவசாயிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் கால் தடயங்களை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து வனத்துறையினர் ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.