Categories
தேசிய செய்திகள்

கால்நடைகளை குறிவைக்கும் பெரியம்மை…. 8 மாநிலங்களில் பரவிட்டு…. அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!!

கால்நடைகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோயால் அந்தமான் நிக்கோபாா் உட்பட 8 மாநிலங்களில் 7,300 க்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளதாகவும், அந்நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் நடைமுறைகள் முடுக்கிவிடப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா். கால்நடைகளின் தோலில் தோன்றும் கட்டிகளை அறிகுறியாக கொண்ட பெரியம்மை, கேப்ரிபாக்ஸ் எனும் தீ நுண்மியால் ஏற்படும் தொற்றுநோய் ஆகும். இது ஈ, கொசு ஆகியவற்றால் கால்நடைகளுக்குப் பரவக்கூடியது ஆகும்.

இந்த நோயால் கால்நடைகளுக்கு உயிரிழப்பும் ஏற்படலாம். மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய இந்த நோய் அண்மை காலங்களாக ஆசியாவில் பரவத் துவங்கியது. சென்ற 2019 ஜூலை மாதத்தில் வங்கதேசத்தில் இந்த நோய்ப்பரவல் காணப்பட்டது. அதே வருடத்தில் இந்தியாவில் மேற்கு வங்கம், ஒடிஸா ஆகிய கிழக்கு மாநிலங்களில் பெரியம்மை நோய்ப்பரவல் காணப்பட்டது. நடப்பு ஆண்டில் முதலாவது பெரியம்மை நோய்பாதிப்பு குஜராத் மாநிலத்தில் கண்டறியப்பட்டது. இப்போது 8 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபாா் யூனியன் பிரதேசத்தில் இந்த நோய்ப் பரவல் காணப்படுகிறது.

இந்த நோயால் 1.85 லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்ற ஜூலை மாதத்தில் இருந்து 7,300-க்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பெரியம்மை நோயால் கால்நடைகளின் இறப்பு விகிதம் 1-2 %ஆக இருப்பதாகவும் , நோய்ப்பரவலை தடுக்கும் வகையில் 17.9 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், இந்நோய் மனிதா்களைத் தாக்குவதில்லை எனவும் அவா் தெரிவித்தாா்.  சென்ற 2019 ஆம் வருடம் மேற்கொள்ளப்பட்ட 19வது கணக்கெடுப்பின்படி இந்தியாவிலுள்ள கால்நடைகளின் மொத்த எண்ணிக்கை 19.2 கோடி ஆகும்.

Categories

Tech |