முன்னோடி விவசாயிகள் கால்நடை தீவனப் பயிர் உற்பத்தியாளராக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார். இது தொடர்பாக கலெக்டர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தீவன உற்பத்தி இயக்க திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகள் கால்நடை தீவனப்பயிர் உற்பத்தியாளராக தொழில் முனையும் திட்டம் இந்த வருடம் செயல்படுத்தப்பட இருக்கிறது. வடகிழக்கு மண்டல அமைப்பில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் வேலூர் உட்பட ஒரு பயனாளியை தேர்வு செய்யும் பொருட்டு குறியீடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் தீவன பற்றாக்குறையை போக்குவதற்காகவும் பசுந்தீவன உற்பத்தியை பெருக்குவதற்காகவும் ஒவ்வொரு வருடமும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது தீவனப்பயிர் அறுவடை இயந்திரம் தீவன பயிர் தயாரிக்கும் இயந்திரம் டிராக்டர் போன்றவற்றை 25 சதவிகித மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் பொருட்டு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் உபகரணங்களின் மொத்த விலை 42 லட்சம் ஆகும் மேலும் இதில் பயனாளிகளின் பங்குத்தொகை 31 1/2 லட்சம் போக மீதமுள்ள 10 1/2 லட்சத்தை அரசு மானியமாக வழங்குகிறது.
இந்த நிலையில் இந்த திட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள், பால் பண்ணை உரிமையாளர்கள், சுய உதவிக் குழுவினர் மற்றும் விவசாய உற்பத்தி குழுக்களை சேர்ந்தவர்கள் பயனாளிகளாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தின் படி ஒரு வருடத்திற்கு 3,200 டன் புல் தயாரித்து விவசாயிகளுக்கு தேவையான பகுதிகளில் விற்பனை செய்ய வேண்டும் மேலும் தீவன பற்றாக்குறையை பெரிதும் குறைக்க சாதகமாவது மட்டுமல்லாமல் தீவனப்பயிர் தொழில் முனைவோராக விவசாயிகளை உருவாக்குவதற்கு இந்த திட்டம் பெரிதும் உதவியாக இருக்கிறது. அதனால் இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர விரும்பும் தகுதியான நபர்கள் அருகே உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரின் அணுகி விண்ணப்பங்கள் பெற்று வருகிற 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருக்கிறது.