Categories
தேசிய செய்திகள்

கால்நடை தீவன ஊழல் வழக்கு – லாலுவுக்கு ஜாமீன்

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தொடர்புடைய சாய்பாஷா கருவூல நிதிமோசடி வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் திரு. லாலு பிரசாத்யாதவ் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் சில வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சிறைவாசம் அனுபவித்து வரும் திரு. லாலு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் காரணமாக ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கால்நடை தீவன வழக்கில் தொடர்புடைய சாய்பாஷா கருவூல நிதிமோசடி வழக்கில் ஜாமீன் கோரி ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் திரு. லாலு பிரசாத்யாதவ் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் தும்கா கருவூல நிதி மோசடி தொடர்பான வழக்கில் நிலுவையில் உள்ளதால் திரு. லாலு பிரசாத் வெளியே வர முடியாத நிலை உள்ளது.

Categories

Tech |