இந்தியாவின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் நோய்க்கான தடுப்பூசியை உருவாக்குகின்றன. மிகப்பெரிய திருப்புமுனையாக விவசாய ஆராய்ச்சி அமைப்பான ஐ சி ஏ ஆர் இன் இரண்டு நிறுவனங்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் நோய்க்கான உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. ஆறு மாநிலங்களில் கால்நடைகளின் இறப்பிற்கு காரணம் லம்பி ஸ்கின்நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலிங் இரண்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசியை வணிக மாயமாக மத்திய அரசு தற்போது திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 8 நிலவரப்படி, ராஜஸ்தானில் 2,111 கால்நடைகள் இறந்துள்ளன, குஜராத்தில் 1,679, பஞ்சாப் 672, இமாச்சலப் பிரதேசம் 38, அந்தமான் & நிக்கோபார் 29 மற்றும் உத்தரகாண்ட் 26 ஆக உள்ளன. இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு ஒடிசாவில் முதல் முறையாக லம்பி ஸ்கின் நோய் பதிவாகியுள்ளது.