தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு தேர்தலில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி காலை மற்றும் மதியம் என இரண்டு வேலைகளிலும் தேர்வு நடைபெறும். இதற்கு டிசம்பர் 17ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள டிசம்பர் 22ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.