கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர பெறப்பட்ட 26,898 விண்ணப்பங்களில் 26,459 விண்ணப்பங்கள் தகுதியானவை.
இந்த தகுதியான விண்ணப்பங்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை மறுநாள் tanuvas.ac.in / www2.tanuvas.ac.in என்ற இணையதளங்களில் காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.