கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 12-ஆம் தேதி முதல் தொடங்கியது. இது மாணவர்களின் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுவதால் மாணவர்கள் ஆர்வத்துடன் https:// adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து வந்தனர்.
இதனையடுத்து மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் செய்யவும், சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்யவும் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று இதற்கான தரவரிசை பட்டியல் காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இதனை மாணவர்கள் இணையதளத்தின் மூலமாக பார்த்து வருகின்றனர்.