மரடோனா மரணத்தில் அவரை அவமதித்த ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலை நாடுகளில் இறந்தவர்களின் உடல்களை அவமதித்தல் என்பது பெரும் குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கால்பந்து ஜாம்பவான் மரடோனா மூளையில் உள்ள ரத்தக் கட்டியை அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த மரண செய்தியை கேட்டு உலகம் முழுவதிலும் உள்ள பல ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். இந்நிலையில் மரடோனாவின் உடல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பெட்டியின் அருகில் தம்ப் காட்டும் வகையில் நின்று சிலர் எடுத்து கொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதனால் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் இறுதிச்சடங்கு மைய ஊழியர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்த மையத்தின் மேலாளர் Diego Picon அந்த புகைப்படத்தில் இருக்கும் மூவருமே தனது நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என்றும், அந்த சவப்பெட்டி கேதுரு மரத்தால் செய்யப்பட்டு இருந்துள்ளது. எனவே மிகவும் கனமாக இருந்ததால் அதை தூக்க உதவுவதற்காக வேறு ஊழியர்களை உதவிக்கு அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் உள்ள Molina என்பவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது