Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கால்பந்து போட்டி…. வெற்றி பெற்ற சிறுவர்கள் …. பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பரிசுகளை வழங்கியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் வைத்து கால்பந்து கழகம் சார்பில் லீக் மற்றும் நாக்-அவுட் முறைகளில் 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு  கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, கால்பந்து கழக செயலாளர் சிக்கந்தர், பயிற்சியாளர் கார்த்திக் சங்கர், அற்புதம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் 10 மற்றும் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் 12 வயதுக்குட்பட்ட   சிறுவர்களுக்கனான போட்டியில் இளையான்குடி அணியும், 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான  போட்டியில் மதுரை அணியும் வெற்றி பெற்றுள்ளது, இதனையடுத்து வெற்றிபெற்ற அணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கி வாழ்த்து கூறியுள்ளார்.

Categories

Tech |