ஈராக் நாட்டின் கிழக்கு பாக்தாத் பகுதியில் அமைந்துள்ள கால்பந்து மைதானம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.அது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.இந்த வெடி விபத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.