பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று பிறந்த தன்னுடைய குழந்தை உயிரிழந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாகவும், மற்றொரு குழந்தை பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி கூறிய அவர் தன்னுடைய குடும்பத்திற்குப் பிரவேசி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் ரொனால்டோவின் குழந்தை உயிரிழந்ததற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.