டெல்லி நொய்டா நகரில் சுதா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் சுபாஷ் பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இதற்கிடையில் சுதாவின் இருமகள்களான நிக்கி மற்றும் பல்லவிக்கு திருமணம் செய்துவைக்க அவர்களது தாயார் விரும்பியுள்ளார். எனினும் சகோதரிகளுக்கு திருமணத்தில் விருப்பமில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நொய்டா நகரில் செக்டார் 96 பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் 11வது மாடிக்கு சென்று அதிகாலையில் சகோதரிகள் இரண்டு பேரும் கீழே குதித்துள்ளனர். இதனிடையில் அவர்களை வீட்டின் காணாமல் தவித்த தாய் சுதா, தன்மகள்களை தேடி வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது சகோதரிகள் இருவரும் காயங்களுடன் கீழே கிடந்துள்ளனர். அதன்பின் அவர்கள் இருவரும் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களில் மூத்த சகோதரி இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மற்றொரு சகோதரிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வால் மகள்களுக்கு திருமணம் செய்துவைக்க சுதா முடிவு செய்துள்ளார். ஆனால் அதை விரும்பாத சகோதரிகள் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளனர். கட்டாயப்படுத்தி தங்களுக்கு திருமணம் செய்துவைக்க தாயார் முயன்றுள்ளார் என அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.