Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கால்வாயின் மீது அமர்ந்திருந்த தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் அருகே காரங்காடு பகுதியில் ஜோசப் ரோசாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேட்டரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் ஜோசப் ரோசாரி நெட்டாங்கோடு பகுதியிலிருக்கும் கால்வாயின் மீது  அமர்ந்துள்ளார். அப்போது நிலைத்தடுமாறி ஜோசப் ரோசரி கால்வாய்க்குள் விழுந்துள்ளார்.

இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஜோசப் ரோசாரி பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இரணியல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஜோசப் ரோசோரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |