Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கால்வாயில் தேங்கிய குப்பைகள்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….. 1 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்….!!!!

கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும்  பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியில் கோடப்பந்து கால்வாய் பிரதான கால்வாயாக  அமைந்துள்ளது. இந்த பகுதியில் கனமழையின் போது பெருக்கெடுத்து வரும் வெள்ளம் ஊட்டி ஏரியில் சேருகிறது. இந்த கால்வாயில் ‌கடந்த சில மாதங்களாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் சேர்ந்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் கால்வாயை பராமரித்து வரும் பொதுப்பணித்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அந்த பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இதையறிந்த மாவட்ட ஆட்சியர் கழிவுநீர் கால்வாயில் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுமாறு நகராட்சி ஆணையத்திற்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் கழிவு நீர் கால்வாயில் இருக்கும் கழிவுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. இதுவரை  1 டன்  கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த கால்வாயில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Categories

Tech |