Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கால்வாயில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு…. அதிர்ச்சியில் கிராமமக்கள்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

வனத்துறையினரால் மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமநல்லூர் கம்பி பாலம் அருகே கால்வாய் ஒன்று அமைந்துள்ளது. இங்கு மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதை அங்கு குளிக்க சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் கல்யாண சுந்தரத்திடம் கூறியுள்ளனர்.

உடனே கல்யாணசுந்தரம் பூதப்பாண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி வனக்காப்பாளர் ஆல்வின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர் கரையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடித்தார். அதன்பிறகு பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

Categories

Tech |