Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கால்வாய்க்குள் பாய்ந்த வாகனம்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. தர்மபுரியில் கோர விபத்து….!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பனங்காடு பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட மேஸ்திரியானா கார்த்தி(22) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் கட்டிட தொழிலாளியான விஷால் என்பவரும் நண்பர்கள் ஆவர். நேற்று முன்தினம் கார்த்தி, விஷால் ஆகிய இரண்டு பேரும் நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். இதனை அடுத்து விழா முடிந்து இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த கழிவு நீர் கால்வாயில் பாய்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கார்த்தி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த விஷாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |