காஞ்சிபுரத்தில் கால்வாயிலிருந்து அழுகிய ஆண் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரிலிருக்கும் கம்ப கால்வாயிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதியிலிருக்கும் பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரை ஏற்ற இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான காவல் துறையினர்கள் கால்வாய்க்கு விரைந்து வந்தனர்.
இதனையடுத்து அவர்கள் அக்கால்வாயில் பார்க்கும்போது 45 வயது நிரம்பிய அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.