Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கால்வாய் தூர்வாரும் பணி…. சொந்த செலவில் செய்த எம்.எல்.ஏ…. ஏராளமான கட்சியினர் பங்கேற்பு….!!

திருநெல்வேலியில் கால்வாயை தூர்வாரும் பணிகள் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பையில் அமைந்திருக்கும் நதியுண்ணி கால்வாயின் மூலமாக சுமார் 2000 ஏக்கர் அளவிலான நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. இந்த கால்வாயினுடைய கிளை கால்வாயின் மூலம் தண்ணீர் ஜமீன்மடையின் வழியாக ஊர்க்காடு மற்றும் சாட்டு பத்து வரையில் செல்லும்.

இந்நிலையில் இந்த கால்வாயில் குப்பைகளும், அமலைச் செடிகளும் தேங்கிக் கிடந்தது. இதனை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ தன்னுடைய சொந்த செலவின் மூலம் பொக்லைன் எந்திரத்தில் வாயிலாக தூர்வாரும் நடவடிக்கையை எடுத்தார். இதற்கான பணிகளை சில முக்கிய கட்சியினர் தொடங்கி வைத்தனர்.

Categories

Tech |