Categories
மாநில செய்திகள்

கால் இருக்காது!… நாக்கு இருக்காது!… அமைச்சர் கீதாஜீவனுக்கு எச்சரிக்கை…. பொங்கி எழுந்த சசிகலா புஷ்பா….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பா.ஜ.க தெற்கு மாவட்ட சிறுபான்மை அணியின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா மற்றும் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது. இவற்றில் சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன்.பால கணபதி போன்றோர் பங்கேற்று ஏழை- எளிய கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் பெண்களுக்கு தையல் மிஷின், மற்றும் சேலைகளை வழங்கினர்.

இதையடுத்து சசிகலா புஷ்பா பேசியதாவது ” 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும், மக்களுக்காக உழைக்கும் தலைவர் அண்ணாமலை பற்றி பேச தகுதி இல்லை. அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்களும் மேடையில் ஏறுவோம் என்று பொதுக் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசி இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சசிகலா புஷ்பா பேசியதாவது “நீங்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது கால் இருக்காது, நாக்கு இருக்காது” என்று கூறினார்.

Categories

Tech |