Categories
பல்சுவை

கால் இழந்த போதிலும்.. தன்னம்பிக்கை கொடுத்த தைரியம்..சாதனை படைத்த பெண்..!!

உலகத்திலேயே முதல் செயற்கை கால் கொண்ட பெண்மணி, மௌண்ட் எவரஸ்ட் என்று சொல்லக்கூடிய இமய மலையின் மேல் ஏறி சாதனை படைத்தார். அவர் கடந்து வந்த பாதையை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்..!

ஜூலை 20 1988 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் பிறந்தவர். மூன்று வயதிலேயே இவரின் அப்பா இறந்துவிட்டார். ரொம்பவே கஷ்டமான சூழ்நிலையில் அம்மாவுடைய வளர்ப்பில் வளர்ந்தார். தன்னுடைய சின்ன வயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்டு இருந்த நேரத்தில் தேசிய அளவில் வாலிபால் விளையாடினார்.

பட்டயப் படிப்பு முடிந்த பிறகு ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியில் இருந்தார். அவருடைய தன்னம்பிக்கை என்னவென்றால் விளையாட்டில் இந்தியாவிற்காக ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதுதான். ஏப்ரல் 12.2.011 அன்றைக்கு அவர் கனவே சிதையும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்தது. பத்மாவதி எக்ஸ்பிரஸ் லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரயிலில் போய்க் கொண்டிருந்த அவரை வழிமறித்து சில நபர்கள் செயின் மற்றும் பொருட்களை கேட்டு மிரட்டினார்கள்.

அவர் தர மறுத்ததால், ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசப்பட்டார். அவர்களின் மேல் 49 ட்ரெயின் ஏறி போயிருக்கு, கிட்டத்தட்ட 24 மணி நேரம் கழித்து தான் அவர் இருக்கக்கூடிய இடத்தை கண்டுபிடித்து, மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் ஏற்பட்ட விளைவு அவருடைய இடதுகால் எடுத்தே ஆக வேண்டும் என்பதுதான்.

அப்படி இல்லை என்றால் அவரின் உயிருக்கு ஆபத்து என்று சொல்லிவிட்டார். வேறு வழி இல்லாமல் அவரின் இடது கால் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்திலும் அவருடைய தன்னம்பிக்கையை மட்டும் அவர் கைவிடவில்லை. இந்தியன் ரயில்வேஸ் நடந்த விஷயத்திற்காக 5 லட்சத்தை இழப்பீடாக கொடுத்தது.

அதை வைத்து ஆமட்டின் என்று சொல்லக்கூடிய செயற்கை காலை அவர் பொருத்திக் கொண்டார். முன்னாடியே சொன்ன மாதிரி அவங்க கஷ்டப்படக் கூடிய சூழ்நிலை இருந்தது, அதனால் அவர் வேலைக்கு போக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவர் நேஷனல் லெவல் வாலிபால் விளையாடியதால், அதனால் 2012இல் CISF CENTRAL INDUSTRIAL SECURITY FORCE, செக்யூரிட்டி ஆபீஸராக வேலை பார்த்தார்.

கனவு ஒரு பக்கம், வேலை ஒரு பக்கம் போய் கொண்டிருந்த நிலைமையில், அப்போதுதான் அவருக்கு தோன்றியது மௌன்ட் எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்று, உடனே அவர் போனில் தொடர்பு கொண்ட நபர், பஞ்சன் ரிபாயா. அவங்கதான் 2011 இல் முதன்முதல்  மௌன்ட் எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்த பெண்மணி ஆவர்.

அவரிடம்  பயிற்சி கற்றுக்கொண்டார், பயிற்சி ரொம்பவே கடுமையாக இருந்தது. மௌன்ட் எவரெஸ்ட்டில் ஏறுவதற்கு முன்னாடி  உத்திர காசியிலுள்ள 6150 மீட்டர் உயரமுள்ள மலை ஏறி அவருடைய பயிற்சியை முடிக்கிறார். 2011ஆம் ஆண்டு அவருடைய கனவை நோக்கி புறப்படுகிறார்.

கடுமையான 52வது பயணத்திற்கு அப்புறம் மே 21.2013. ஆம் ஆண்டு காலை 10.55 மணிக்கு மௌண்ட் எவரஸ்ட் உடைய உச்சியில் இந்திய கொடியை நாட்டினார். அவர் வேறு யாரும் இல்லை அவங்க தான் அருணிமா சின்கா முதல் செயற்கை கால் கொண்டு பெண்மணியாக மௌன்ட் எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்தவர்.

ஓடும் ரெய்லில்  இருந்து தூக்கி வீசப்பட்டு 49 ட்ரெயின் அவரின் கால் மீது ஏறி ஒரு கால் எடுக்கப்பட்டு, கஷ்டபட்ட குடும்பத்தில் இருந்து வந்து, இந்த சாதனை செய்து இருக்கிறார். அவரிடம்  கேட்ட பொழுது கூறியது என்னவென்றால் தன்னுடைய தன்னம்பிக்கையும், மன உறுதி நாளையும்தா, இந்த செயலை செய்யமுடிந்தது.

அது மட்டுமில்லாமல் எவர் ஏழு கண்டத்தில் உள்ள ஆறு உயரமான மலையை ஏறி சாதனை செய்திருக்கிறார். அருணிமா சின்கா 2015இல் பத்மஸ்ரீ விருதும் மற்றும் டென்சிங் நார்கே நேஷனல் அட்வெஞ்சர் விருதும், 2016 இல் முதல் பெண்மணி என்ற விருதும், 2018 உயர்தரமான டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது.

அருணிமா சின்கா மாதிரி சாதிக்க நினைக்கும் அனைத்து பெண்களுக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துக்கள்..!!

மகளிர் தின கவிதை ஒரு உணர்வு கவிதை ஒரு மலை ஏற்றம் நலத்திற்காக நம் நலத்தை துறந்த துறவியர் உள்ளத்தில் மங்கையர் உள்ளத்தில் ஒரு மழலையர் நம் நலத்திற்காக தன்னலத்தை துறந்த துறவியர் அறியமுடியாத அவர்கள் மனதின் ஆழம் உண்மையில் அதை அறிந்திட நமக்கு அறிவு இல்லை போலும் அவர்கள் நெஞ்சுக்குள் மட்டும் வற்றாத கருணை எனும் வீரம் கட்டு மரத்தால் தான் கிடைக்கும் வாழ்க்கை எனும் கடலில் தூரம் வாழ்க்கை என்னும் கடலில் தூரம் உணர்ந்திட வேண்டும் இதை நாம் நாளும் அவர்கள் உயர்ந்திட நாம் பாடுபட வேண்டும் என்றாலும் என்நாளும் அவள் தான் நம் இல்லத்தில் பெருமையை அவளால்தான் இல்லை நம் இல்லத்தில் வறுமையே என்னாலும் நம் இல்லத்தில் இருக்கும் இந்த பெண்ணா பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு அந்த பொறுமையே பொறாமை கொள்ளும் இவள் பொறுமையை கண்டு அது உணர்ந்திடுவோம் அவள் பொறுமையை மற்றவர்களுக்கு உணர்த்துவோம் அவள் பெருமையை

Categories

Tech |