Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : இதுதான் இந்தியா….. “ஷஹீனிடம் நலம் விசாரித்த வீரர்கள்”….. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ.!!

காயம் காரணமாக பாகிஸ்தான் அணியில் இருந்து விலகியுள்ள ஷஹீன் அப்ரிடியை இந்திய வீரர்கள் ஒவ்வொருவராக நலம் விசாரித்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

20 ஓவராக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை முதல் தொடங்கி  செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6  அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே பிரிவில் இருக்கும் பாகிஸ்தான் அணியுடன் நாளை மறுநாள், அதாவது 28ஆம் தேதி துபாயில் லீக் சுற்றில் மோத இருக்கிறது..

ஆசிய தொடரிலேயே இந்த போட்டிதான் மிக முக்கியமான போட்டி.. இந்த போட்டியை எதிர்பார்த்து தான் உலக ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.. கடந்த 2021 ஆம் ஆண்டு இரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் உலக கோப்பை வரலாற்றில் முதன் முறையாக வென்று சாதனையை நிகழ்த்திக் காட்டியது. இந்த நிலையில் இந்த ஆசிய தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை பழிதீர்க்குமா? என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும்.. இந்திய அணியில் காயம் காரணமாக ஜஸ்பிரிட் பும்ரா விலகி உள்ள நிலையில், பாகிஸ்தான் அணியிலும் நட்சத்திர வீரர் ஷஹீன் ஷா அப்ரிடி விலகி இருக்கிறார். ஷஹீன் ஷா அப்ரிடி விலகியிருந்தாலும் பாகிஸ்தான் அணியுடன் சேர்ந்து துபாய்க்கு பயணித்திருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் காயம் காரணமாக பாகிஸ்தான் அணியில் இருந்து விலகியுள்ள ஷஹீன் அப்ரிடியை இந்திய வீரர்கள் பயிற்சிக்கு செல்லும்போது  ஒவ்வொருவராக நலம் விசாரித்து செல்கின்றனர்.. முதலில் சஹால் சந்தித்து பேசி நலம் விசாரிக்கிறார். அதேபோல விராட் கோலியும் கைகொடுத்து முழங்காலில் காலில் ஏற்பட்ட காயம் குறித்து அவரிடம் கேட்டார்.. நேற்று பாபர் அசாமையும் கோலி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. மேலும் ரிஷப் பண்ட், கே.எல் ராகுல் ஆகியோரும் அவரிடம் நலம் விசாரிக்கின்றனர்.. இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது..

கடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவியதிற்கு ஷஹீன் அப்ரிடி முக்கிய காரணமாக இருந்தார். இந்திய அணியில் தொடக்கக்காரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் (3) ரோகித் சர்மா (0) மற்றும் கடைசி கட்டமாக அரைசதம் அடித்த விராட் கோலியையும் ஷஹீன் அப்ரிடி வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |