Categories
உலக செய்திகள்

கால் நடைகளை காப்பாற்ற…. மிருகத்துடன் போராடிய விவசாயி… இறுதியில் நடந்த சம்பவம்…!!

விவசாயி ஒருவர் தன் கால்நடைகளை மீட்பதற்காக ஓநாயுடன் போராடிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் கிராமம் ஒன்று உள்ளது. இக்கிராமத்திற்குள் ஓநாய்கள் புகுந்து கால்நடைகளை கொன்று வருவது வழக்கமாக நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் அதே போல் கிராமத்திற்குள் புகுந்த ஒரு பெரிய ஓநாயானது நாய்கள் இரண்டை கொன்றுள்ளது.மேலும் அங்கிருந்த குதிரையையும் தாக்கியுள்ளது. அப்போது அங்கு வந்த விவசாயி தன் நாய்கள் ஓநாயால் கொல்லப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் மீதமுள்ள தன் கால்நடைகளை காப்பாற்ற முடிவெடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஒநாயுடன் வெறும் கையால் அந்த விவசாயி சண்டை போட்டுள்ளார். அதாவது கடும் பனியில்  விவசாயியும் ஓநாயும் சண்டையிட்டுள்ளனர். இதனையடுத்து ஒநாயுடன் கடுமையாக போராடிய அவர் இறுதியாக அதன் கழுத்தை நெரித்து கொண்டுள்ளார். அதன் பின் கொல்லப்பட்ட ஓநாயுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.

Categories

Tech |