கால் வலியில் இருந்து முற்றிலும் விடுபட அருமையான மருத்துவ குணநலன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
கால்வலியானது, ஆரம்ப கால கட்டத்தில் கால்கள் வலிக்க ஆரம்பித்து, பின்பு நாட்கள் ஆக ஆக தாங்க முடியாத வலியை உண்டாக்கி விடும். சில சமயங்களில் கால்களில் மிகுந்த வலியை உண்டாக்கி எரிச்சலடைய செய்யும். அந்த கால் வலிகளுக்கு தீர்வே கிடையாதா என்று பலர் புலம்புவார்கள்.
ஒரு நல்ல செய்தி என்னவென்றால், கால் வலிகளுக்கு இயற்கையாகவே எளிதில் தீர்வு காணலாம். இந்த செய்தி குறிப்பில், கால் வலிக்கான எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பின்பற்றினால் நிச்சயம் கால் வலியில் இருந்து விடுபடலாம்.
பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனை தான் கால் வலி. அதற்கு நம் வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே ஈஸியாக தீர்வு காண முடியும். அந்த இயற்கை வழிகள் எவையென்று காண்போம்.
பாத்திரத்தில் 1 டீஸ்பூன் வின்டர் க்ரீன் ஆயிலுடன், 4 டீஸ்பூன் வெஜிடேபிள் ஆயில் மற்றும் வைட்டமின் ஈ ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு எண்ணெய் கலவையை பாதிக்கப்பட்ட கால் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தினமும் யோகாசனம் செய்து வந்தால் எளிதில் கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். சர்வங்காசனம், சாவாசனம் மற்றும் புஜங்காசனம் போன்ற யோகாசனத்தை தினமும் செய்வது வருவது கால் வலிக்கு மிகவும் நல்லது.
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதனை தினமும் இரண்டு முறை என தொடர்ந்து ஒரு வாரம் குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.
பாத்திரத்தில் மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் 1 அல்லது 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது தேன் கலந்து கொள்ளவும் . அதனை தினமம் 2 வேலை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.