மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தமிழக அரசால் வேலைதேடும் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை திட்டத்தில் பயன் பெற்று வருபவர்கள் மூன்று வருடம் வரை உதவித்தொகை உள்ள ஆவணத்தை பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
அதேபோல் இந்த ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை உள்ள உறுதிமொழி ஆவணங்கள் சமர்ப்பிக்க தவறியவர்கள் தற்போது தமிழக அரசு வழங்கியுள்ள 1. 1. 2022 முதல் 31.3.2022 வரை ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தில் இணைய விரும்புவார்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களுடைய கல்வி கல்வித்தகுதி, குடும்ப வருமானம், அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பித்து இந்த திட்டத்தில் சேரலாம் என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.