வெட்டுடையார் காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள புழல் காவாங்கரை திருமலை நகரில் வசித்து வருபவர் முனிசாமி. இவர் மனைவி 45 வயதுடைய சந்திரா. இவர் கடந்த மாதம் 16 ஆம் தேதி அன்று நடைபெற்ற புழல் காவாங்கரை கண்ணப்பசாமி நகரில் இருக்கின்ற வெட்டுடையார் காளியம்மன் கோவில் தீ மிதி திருவிழாவில் தீ மிதித்துள்ளார். அப்போது திடீரென்று தீக்குண்டத்தில் சந்திரா தவறி விழுந்துட்டார். இதனால் கால், வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த தீக்காயம் அடைந்துள்ளார்.
உடனே அருகில் இருந்தவர்கள் சந்திராவை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி சந்திரா பரிதாபமாக இறந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.