பிரபல ஆவணப்பட இயக்குநரான லீனா மணிமேகலையின் புதிய படமான “காளி” பட போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி பல சர்ச்சையை கிளப்பியது. இந்து கடவுளான காளி வேடம் அணிந்த பெண்ணின் வாயில் சிகரெட்டுடன் இருந்ததும், கையில் வானவில் கொடி இருந்ததுமே சர்ச்சை காரணங்களாக பேசப்பட்டது.
இருப்பினும் லீனா அவரது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார். அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி தற்போது லீனா அவரது ட்விட்டர் பக்கத்தில் புதிதாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் சிவன், பார்வதி வேடமணிந்த நபர்கள் வாயில் சிகரெட்டுடன் இருக்கின்றனர்.