Categories
உலக செய்திகள்

காளி பட போஸ்டர்…. உலகளவில் வெடித்த சர்ச்சை…. டுவிட்டர் எடுத்த திடீர் முடிவு…!!!

சர்ச்சைக்குரிய படத்தின் போஸ்டர் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரபல ஆவணப்பட இயக்குனராக இருப்பவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய பல ஆவண படங்கள் ஏராளமான விருதுகளை குவித்துள்ளது. இவர் சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற அண்டர் தி டெண்ட் என்ற திட்டத்தின் கீழ் காளி என்ற ஆவணப்படத்தை தயாரித்து அதனுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இந்த போஸ்டர் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் காளி தெய்வமானது ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை கையில் வைத்துக்கொண்டு சிகரெட் பிடிப்பது போன்று போஸ்டர் இருந்தது.

இதன் காரணமாகத்தான் லீனா மணிமேகலையின் ஆவணப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இது தொடர்பாக லீனா மணிமேகலையின் மீது டெல்லி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் லீனா மணிமேகலை என்ன பிரச்சனை வந்தாலும் நான் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த போஸ்டரை தற்போது ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. மேலும் காளி ஆவணப்படத்தை வெளியிடுவதற்கும் தடை  விதிக்க வேண்டும் என கனடா நாட்டிலுள்ள இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்தது. இதற்கு வருத்தம் தெரிவித்த ஆகா கான் அருங்காட்சியகம் ஆவணப்படம் திரையிடப்படமாட்டாது என கூறியுள்ளது.

Categories

Tech |