பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசுக்கள் பராமரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்தவகையில் பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் உற்பத்தி செய்யாத மற்றும் தரம் தாழ்ந்த காளைகளின் விதைகளை நீக்குவதற்கு அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங்க் சவுகான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இதற்காக ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் மட்டுமல்லாமல் ஆளும் பாஜகவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் அம்மாநில அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக எம்பி பிரக்யா தாக்கூர், காளைகளுக்கு காயடிக்கும் இந்த உத்தரவானது பூர்விக பசு வகைகளை அழிக்கும் சதி திட்டத்தின் பின்னணி ஆகும் என்று குற்றம்சாட்டியுள்ளார். பிரக்யா தாக்கூரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனைய டுத்து அனைத்து தரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்கள் வந்ததன் காரணமாக காளைகளை காயடிக்கும் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.